பொறுப்பு அமைச்சர் பெயரைத்தானே முதலில் போடணும்?
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இன்று சென்னையில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தானில் கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் த.வெ.க அரசில் மோதல் வெடித்துள்ளது. அதாவது, அமைச்சர் ஜெகதீஸ்வரி தன் பெயரை ஏன் முதலில் போடவில்லை என்று கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் வெள்ளிக் கிழமை சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா காலையில் தொடங்கியது. விழாவுக்கான பேனரில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலில் இருந்துள்ளதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் கெகதீஸ்வரி, துறை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற நிலையில் முதலில் என் பெயர் தானே பேனரில் முதலில் இருக்க வேண்டும், ஏன் அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலில் இருக்கிறது என்று விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வந்த மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.





