5 நாள் பயணமாக மத்தியப் பிரதேசம் சென்ற திரவுபதி முர்மு..!
5 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்தியப் பிரதேசம் சென்றுள்ளார். டெல்லியில் இருந்து இந்தூர் வந்தடைந்த திரவுபதி முர்முவை, மத்தியப் பிரதேச ஆளுநர் மங்கு பாய் படேல் மற்றும் முதலமைச்சர் மோகன் யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.
முதலில் பேதுல் நகருக்கும் செல்லும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். அதன் பின்னர் இன்று மாலை புகழ்பெற்ற ஓம்காரேஷ்வர் மற்றும் அமலேஷ்வர் கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார்.





