இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் இன்று அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலானது சென்னையில் இருந்து தேனி மாவட்டம் காட் ரோட்டில் அமைந்துள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு – பெரியகுளம் பிரதான சாலையில் காட் ரோடு என்று சொல்லபடும் கொடைக்கானல் செல்லும் பிரிவில் அமைந்துள்ளது மறைந்த இயக்குனர் பாரதிராஜாவின் பண்ணை வீடு.
பண்ணை வீட்டுக்கு அருகாமையிலேயே உள்ள இடத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அதிகாலை முதலே பொதுமக்கள், முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக அவரது பூத உடலானது வைக்கப்பட்டு மாலை 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தமிழக அரசு சார்பில் மின்சாரத்துறை அமைச்சர் CTR நிர்மல்குமார் மற்றும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், பொதுமக்கள் என பலர் இறுதி நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு குடிநீர், நாற்காலி உள்ளிட்ட வசதிகளை வத்தலகுண்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சரக DIG சசிமோகன் தலைமையில் திண்டுக்கல், தேனி மாவட்ட காவலர்கள் 1000 – த்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணி ஈடுபட்டுள்ளனர்.





