--- --:--:-- --

விசிகவில் இருந்து சங்கத்தமிழன் இடைநீக்கம்..!

02

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளையோர் அமைப்பான ‘இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை’ என்னும் துணைநிலை அமைப்பின் மாநில செயலாளர் பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் கட்சியிலிருந்து 3 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் சங்கத்தமிழன் இடை நீக்கம் செய்யப்பட்டதற்கான 10 காரணங்களையும் விரிவாக பட்டியிலிட்டுள்ளார்.

 

 

1) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளையோர் அமைப்பான ‘இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை’ என்னும் துணைநிலை அமைப்பின் மாநில செயலாளர் பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

 

2) கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்கள் குறித்து கட்சிக்குள்ளேயே பேசவேண்டிய முரண்களைப் பொதுவெளியில் பேசி, கட்சிக்கும் கட்சியின் தலைமைக்கும் தேவையற்ற நிர்வாக நெருக்கடிகளை உருவாக்கி வருகிறார் .

 

3) தேர்தலுக்கு முன்பு ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்’ நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில், அவ்வப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடுகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பரப்பும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்போதும் கருத்து மாறுபாடுகளைக் கடந்து பேணவேண்டிய தோழமைக்கான மதிப்பீடுகளைச் சிதைக்கும் வகையில், ஊகமான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

 

4) கட்சியின் நலன்களுக்கு எதிரான அவரது நடவடிக்கைகள் குறித்து, கட்சியின் முன்னணி பொறுப்பாளர் என்கிற முறையில், அவருக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி, உரிய நேரத்தில்- உரிய வகையில், ‘கடிந்தும் -கண்டித்தும்’ அறிவுறுத்தப்பட்டது. எனினும், அவரது நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றமும் இல்லை.

Leave a Reply

Right Menu Icon