--- --:--:-- --

அ.தி.மு.க-வில் தொடர்கிறீர்களா? – பதிலளிக்காமல் புன்னகையுடன் கடந்த விஜயபாஸ்கர்

10

.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம், “நீங்கள் அ.தி.மு.க-வில் தான் தொடர்கிறீர்களா?” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு அவர் நேரடியாக எந்தவொரு பதிலும் அளிக்காமல், மெளனமாகப் புன்னகைத்தவாறே அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளார்.

 

இதற்கு முன்னதாகவும் இதே போன்றதொரு சூழ்நிலையில், இதே கேள்விக்கு அவர் பதிலைத் தவிர்த்து புன்னகையுடன் கடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்தத் தொடர் மௌனமும் புன்னகையும் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களையும் யூகங்களையும் கிளப்பியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon