--- --:--:-- --

தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்

02

துரை, தென்காசி, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் எனக் கணித்துள்ளது.

 

அதேபோல, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களிலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon