பக்ரீத் பண்டிகை, முகூர்த்தம், தொடர் விடுமுறை, வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் 31ம் தேதி வரை பயணிகளின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, கும்பகோணம், மதுரை, சேலம், கோவை, நெல்லை, குமரி உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.