அதிமுக கொறடா விவகாரத்தில் நடுநிலையோடு பணியாற்றுவேன்: ஜே.சி.டி.பிரபாகர்
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 45-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அதிமுக கொறடா விவகாரத்தில் தாம் நடுநிலையோடு பணியாற்றுவதாகவும், இது தொடர்பாக அதிமுக அளித்துள்ள இரு மனுக்களும் தற்போது ஆய்வில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “நான் நடுநிலையோடு பணியாற்றுகிறேனா இல்லையா என்பதை தீர்ப்பு வழங்கும்போது நாடே தெரிந்துகொள்ளும்” – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்





