--- --:--:-- --

திமுக மீது சவாரி செய்த காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது – உதயநிதி ஸ்டாலின்

2

மிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி 5 ஆண்டுகளும் முழுமையாக நீடிக்காது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி பங்கேற்ற இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நன்றி கூட கூறாமல் ஒரே இரவில் காங்கிரஸ் அணி மாறிச் சென்றதாக கண்டனம் தெரிவித்தும்., தவெக பொறுப்பேற்ற 13 நாட்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

கூட்டத்தில் உரையற்றிய மு.க.ஸ்டாலின், தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என கூறினார். விசிக மற்றும் ஐ.யு.எம்.எல். அமைச்சரவையில் இணைந்ததையு மறைமுகமாக சாடினார். முன்னதாக பேசிய உதயநிதி ஸ்டாலின், 20 ஆண்டுகளாக திமுக முதுகில் சவாரி செய்த காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக கூறினார். கூட்டத்தின் நடுவே திமுகவினர் காங்கிரஸ் கட்சியை கண்டித்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை கண்டித்து திமுக தீர்மானம் நிறைவேற்றியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மீது முன்வைக்கும் துரோகம், முதுகில் குத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள அவர், அரசியலில் பரஸ்பர மரியாதையும், பண்பும் நிலைக்க வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.

 

இதேபோல, தேர்தல் படுதோல்விக்குப் பிறகும் திமுகவினர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவரும் அமைச்சருமான ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழுவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமைத்துள்ளது. முன்னாள் எம்.பி. ஜெயக்குமார் தலைமையில் இதயதுல்லா, ஸ்வர்ணா சேதுராமன், மெய்யப்பன், கமலாக்‌ஷி காமராஜ் ஆகிய 5 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon