--- --:--:-- --

ரூ.2.90 கோடியில் 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்கள் – கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்வர்

4

மிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.2.90 கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப் வாகனங்களின் சேவையை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலக நுழைவுவாயில் அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக இந்த புதிய வாகனங்கள் பிரத்யேகமாக வாங்கப்பட்டுள்ளன.

 

தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில், 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களின் சேவையைக் கொடியசைத்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, அந்த வாகனங்களை இயக்கவுள்ள ஓட்டுநர்களுக்கு வாகனங்களின் சாவிகளை அவர் முறைப்படி வழங்கினார். நிகழ்வின் சிறப்பம்சமாக, புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களின் திறன், வேகம் மற்றும் இயக்கக் கட்டுப்பாடுகளைப் பரிசோதிக்கும் வகையில், ஒரு வாகனத்தை முதலமைச்சர் விஜய் தானே ஓட்டிப் (டெஸ்ட் டிரைவ்) பார்த்தார்.

 

தலைமைச் செயலக வளாகத்திற்குள் அவரே வாகனத்தை இயக்கி சோதனை செய்த விடியோவும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழகத்தின் கிராமப்புற மற்றும் ஊரகப் பகுதி மக்களின் மருத்துவத் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்யும் நோக்கில், இந்த 40 புதிய வாகனங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon