--- --:--:-- --

பேருந்து, ரயில்நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

9

ஈரோடு மாவட்டத்தில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி பரப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்தார்.

 

இதையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என உறுதி செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இதில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வதந்தி பரப்பிய சிறுமுகையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon