எதுவுமே தெரியாது என்பது விந்தையாக உள்ளது – அமைச்சர் கே.என்.நேருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
தனக்கு இதுவரை நோட்டீஸ் வழங்காததால் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு குறித்து தனக்கு ஏதும் தெரியாது. எனவே தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று அமைச்சர் நேரு தரப்பில் வாதிடப்பட்டது.
‘வழக்கு விசாரணை நடந்த போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உள்ளிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி வழக்கில் வாதிட்டு – தீர்ப்பும் வழங்கப்பட்ட பிறகு அமைச்சராக உள்ள நேரு தனக்கு எதுவும் தெரியாது என்று தற்போது கூறுவது விந்தையாக உள்ளது’ என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நோட்டீஸ் வழங்கவோ, தீர்ப்புக்கு தடை விதிக்கவோ மறுத்ததுடன் வழக்கு விசாரணையை மறு தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.





