--- --:--:-- --

அதிகாலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்த விஜய்..!

3

மிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து 2026 தேர்தலில் களம்கண்டுள்ளார் நடிகர் விஜய். தேர்தலில் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அடுத்தகட்ட ஆலோசனைகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் திருச்செந்தூர் செல்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் நள்ளிரவில் மதுரை வந்தார் விஜய். நள்ளிரவில் மதுரை விமானநிலையத்தில் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

அதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்றவர் பட்டு வேட்டி மேல் துண்டு அணிந்து அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்றார். திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் சார்பாக விஜய்க்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற விஜய் முருகர், வள்ளி, தெய்வானை, சண்முகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களை வணங்கினார்.

 

இந்த தரிசனத்தின் போது விஜய் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் ரூட் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஜெகதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர். கோயிலிலும் அவரை காண கூட்டம் குழுமியிருந்தது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் திருச்செந்தூரில் அதிகாலை தரிசனத்தில் விஜய் பங்கேற்றது கவனம் ஈர்த்துள்ளது. தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு விஜய் புறப்பட்டுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சென்று தனது தனி விமான மூலம் மீண்டும் சென்னை செல்கிறார்.

Leave a Reply

Right Menu Icon