பட்டாசு வெடிவிபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5.5 லட்சம்..!
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5.5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் வழங்க முடிவு செய்துள்ளது.
பட்டாசு ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கமாக வழங்கப்படும் 5.5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை, ஆலையில் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதால் வழங்க முடியாத சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு சிவகாசியில் உள்ள பல்வேறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் இணைந்து உயிரிழந்த 25 குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகையை வழங்க உள்ளனர்.






