--- --:--:-- --

வீதிவீதியாக செல்வராஜ் வாக்கு சேகரிப்பு.. உற்சாகமாக வரவேற்று மக்கள் ஆதரவு!

செல்வராஜ்

பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்த செல்வராஜ்

பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் க. செல்வராஜ், பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதன் ஒரு பகுதியாக டி.இ.எல்.சி சகாயர் ஆலயம் மற்றும் புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயம் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று அவர் கிறித்தவப் பெருமக்களிடம் ஆதரவு கோரினார். அப்போது புனித வேளாங்கண்ணி அன்னை ஆலயப் பகுதிக்கு முறையான பேருந்து நிறுத்தம் இல்லை என்ற கோரிக்கையைப் பொதுமக்கள் முன்வைத்தனர்.

மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வேட்பாளர், வெற்றி பெற்றவுடன் அந்த இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தம் நிச்சயம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். கடந்த காலங்களில் திமுக அரசு சிறுபான்மையின மக்களின் நலனுக்காகச் செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை அவர் சுட்டிக்காட்டினார்.

 

selvaraj
தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த வேட்பாளர் செல்வராஜுக்கு ஆசி வழங்கப்பட்டது.

குறிப்பாக, தேவாலயங்களைப் புனரமைக்க வழங்கப்படும் நிதி உதவி மற்றும் கல்வி உதவித்தொகை போன்ற சாதனைகளை அவர் எடுத்துரைத்தார். பல்லடம் தொகுதியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதே தனது முதன்மை நோக்கம் என்றும், மக்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

திமுக தலைமையிலான அரசு அமைய மக்கள் பேராதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். செல்வராஜ் செல்லுமிடங்கள் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு தந்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பதாக உறுதி அளித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon