--- --:--:-- --

தென்னம்பாளையத்தில் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிய தினேஷ்குமார்

தினேஷ்குமார்

தெற்கு தொகுதியில் தினேஷ்குமாருக்கு மலர்களை தூவி வரவேற்பு தரப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் என். தினேஷ்குமார் இன்று மேற்கொண்ட தீவிர வாக்கு சேகரிப்புப் பயணம், அத்தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக தென்னம்பாளையம் பகுதியில் அவர் வீதி வீதியாகச் சென்றபோது, பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பு திமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

dineshkumar
அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்தார் தெற்கு வேட்பாளர் தினேஷ்குமார்.

முன்னதாக, புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு வேட்பாளர் தினேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமத்துவம், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆகிய உயரிய விழுமியங்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய அம்பேத்கரின் சிந்தனைகள், இன்றைய காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமானவை என்றும், அவை என்றென்றும் நமது பயணத்திற்கு வழிகாட்டியாகத் திகழும் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தினேஷ்குமார்
வாக்குச்சேகரிப்பின்போது அளித்த வரவேற்பிய ஏற்றுக் கொள்ளும் தினேஷ்குமார்

இதனைத் தொடர்ந்து தென்னம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்புப் பணியைத் தொடங்கிய வேட்பாளருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் திரண்டிருந்த மக்கள், வேட்பாளருக்கு கைகுலுக்கி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். மக்களின் இந்த எதிர்பாராத அதீத அன்பு மற்றும் உற்சாகமான வரவேற்பைக் கண்டு ஒரு நிமிடம் வேட்பாளர் தினேஷ்குமார் திக்குமுக்காடிப் போனார்.

முதியவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடிய அவர், தொகுதியின் வளர்ச்சிக்காகத் தான் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களைப் பட்டியலிட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தற்போதைய அரசின் சாதனைகளை விளக்கி அவர் பேசியபோது, பொதுமக்கள் மத்தியில் பலத்த கரவொலி எழுந்தது.

மக்களின் பேராதரவைப் பார்க்கும்போது வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த உடன்பிறப்புகள், இந்த வரவேற்பு தெற்கு தொகுதியில் திமுகவின் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளதாகக் கூறினர். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் புடைசூழ நடைபெற்ற இந்தப் பிரச்சாரப் பயணம், தென்னம்பாளையம் பகுதியையே திருவிழாக் கோலமாக மாற்றியது.

Leave a Reply

Right Menu Icon