--- --:--:-- --

தவெக தலைவர் விஜயின் சென்னை பரப்புரை திடீர் ரத்து..!

2

வில்லிவாக்கம், தியாகராய நகர் தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை செய்யவிருந்த நிலையில், பரப்புரை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் மதியம் 11 மணி முதல் 1 மணி வரையில் பரப்புரை செய்ய தவெக தரப்பில் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதேபோல, தியாகராய நகரில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பரப்புரை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், வில்லிவாக்கத்தில் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரையிலும், தியாகராய நகரில் 2 மணி முதல் 3 மணி வரையிலும் மட்டுமே காவல் துறை அனுமதி வழங்கியது. மேலும், பரப்புரை கூட்டத்தில் 300 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டுமென நிபந்தனை விதித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, தவெகவின் ஐடி விங் அலுவலகத்தில் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பரப்புரை செய்ய காவல் துறை குறைந்த நேரமே அனுமதி அளித்துள்ளதால் இன்றைய பரப்புரை திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon