--- --:--:-- --

ஏப்ரல் 1 முதல் ஏற்படும் மாற்றங்கள்..!

2

யில் கட்டணம் தொடங்கி வெள்ளி நகை அடமானம் வரை இன்று முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் சில புதிய திருத்தங்களை மத்திய ரயில்வே துறை அமல்படுத்தி உள்ளது. அதன்படி Confirm டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் ரத்து செய்தால், குறைந்தபட்ச ரத்து கட்டணம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

 

அதேநேரம், ரயில் புறப்படுவதற்கு 72 மணி முதல் 24 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் கட்டணத்தில் 25 சதவீதமும், 8 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால், 50 சதவீதமும் பிடித்தம் செய்யப்படும். ஆனால், 8 மணி நேரத்திற்கும் குறைவாக டிக்கெட்டை ரத்து செய்தால் ஒரு ரூபாய் கூட திரும்ப அளிக்கப்பட மாட்டாது என்ற விதி அமலுக்கு வந்தது.

 

மேலும், ரயிலேறும் நிலையத்தை அரைமணி நேரத்துக்கு முன்பு கூட மாற்றியமைக்கலாம். கடைசி 30 நிமிடங்கள் முன்பாக வகுப்புகளை upgrade செய்து கொள்ளலாம் என்ற விதிகளும் அமலுக்கு வந்தன. 1961 முதல் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக உருவாக்கப்பட்ட புதிய வருமான வரிச் சட்டம் 2025 இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய வருமான வரி சட்டத்தில் நிதியாண்டு, மதிப்பீட்டு ஆண்டு என்ற முறை நீக்கப்பட்டு, வரி ஆண்டு என்ற ஒற்றை முறை விதி அமலுக்கு வந்தது.

 

இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பிறகு அதில் திருத்தங்கள் செய்ய இதுவரை 9 மாதங்கள் இருந்த நிலையில், இனி 12 மாதங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. PF, Gratuity பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் நிறுவனத்தின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி குறைந்தது 50 சதவீதம் என்ற முறை அமலுக்கு வந்தது.

 

இனி தங்கம் போல் வெள்ளியையும் வங்கிகளில் அடமான வைத்து கடன் பெற முடியும். நகைகளாக இருந்தால் 10 கிலோ வரையிலும், நாணயங்களாக இருந்தால் 500 கிராம் வரையும் வெள்ளியை அடமானம் வைக்க அனுமதிக்கப்படுகிறது. அதிலும், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு வெள்ளியின் மதிப்பில் 85 சதவீதம் வரையும், 5 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள கடன்களுக்கு 75 சதவீதம் வரையும் கடன் வழங்கப்படும்.

 

தனி நபர் கிரெடிட் கார்டு மூலம் 10 லட்ச ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளின் தரவுகளை வருமான வரித்துறைக்கு வங்கிகள் வழங்கும் சட்டம் அமலுக்கு வந்தது. யுபிஐ ஆஃப் வாலட் மூலம் பணம் செலுத்தும்போது இனி இரண்டடுக்கு பாதுகாப்பு சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான் கார்டு பெற முன்பு ஆதார் கார்டு மட்டும் போதுமானது என்றிருந்த நிலையில் இன்று முதல் பிறப்புச் சான்று, 10ஆம் வகுப்புச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் நிலையில், அதன்படி இன்று முதல் ஸ்ரீபெரும்புதூர், பரனூர், வானகரம், மதுரை உள்ளிட்ட 68 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதேபோல் பாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 75 ரூபாயாக உயர்ந்தத

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon