--- --:--:-- --

திருப்பத்தூர் தி.மு.க ஒன்றிய செயலாளர் திடீர் ராஜினாமா; அமைச்சர் எ.வ.வேலு மீது புகார்

8

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாதனூர் ஒன்றிய குழு தலைவருமான சுரேஷ்குமார் தனது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளருமான சண்முகத்தின் மகனான இவர், இது தொடர்பாக திமுக தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஆதிக்க சக்திகளின் அழுத்தம் காரணமாகவே தாம் இந்தப் பதவியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

குறிப்பாக, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான நேர்காணலில் பங்கேற்றும் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு அமைச்சர் எ.வ.வேலுவே முக்கியக் காரணம் என்று சுரேஷ்குமார் பகிரங்கமாகப் புகார் தெரிவித்துள்ளார். இந்தத் திடீர் ராஜினாமா மற்றும் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு திருப்பத்தூர் மாவட்ட திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon