மீண்டும் அதிரடி காட்டும் தங்கம் விலை..!
மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது. பிறகு நடுவில் தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை ஓரளவுக்கு சரிந்து வருவதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். என்னதான் நகை விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்தாலும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்திற்குள்ளேயே சுற்றி வருகிறது.
அந்த வகையில், நேற்று முன் தினம் (மார்ச் 28) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,660க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,280க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (30.03.2026) காலை தங்கம் விலை கணிசமாக குறைந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,600க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், (30.03.2026) மாலை வேளையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதன்படி ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,10,160க்கும், கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,770க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.91,920க்கும், கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ.11,490க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.255க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





