வெளியான விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு..!
தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் இன்று பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் தனது சொத்து விவரம் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். தற்போது பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தனது பெயரில் அசையும் சொத்து ரூ. 404.58 கோடி என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ. 11.51 கோடி என்றும் தெரிவித்துள்ளார். தன்னிடம் 110 சவரன் தங்க நகைகளும், ஐந்து கார்களும் உள்ளன என்றும், கடன் ஏதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். விஜய் தனது மனைவி சங்கீதா பெயரில் 2020 – 2021 நிதியாண்டில் ரூ. 6,13,520 வருமானம் இருந்ததாகவும், அதன் பிறகு 2021 – 2022 நிதியாண்டு முதல் 2024 – 2025 நிதியாண்டு வரை எந்த வருமானமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் மனைவி சங்கீதாவுக்கு சுமார் 391 சவரன் நகைகள் உள்ளன எனவும், வெள்ளி இரண்டு கிலோ இருப்பதாகவும், வைரம் 134.91 கேரட் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தம் தன் மனைவி சங்கீதாவுக்கு ரூ. 15,51,79,421 மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.





