--- --:--:-- --

திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு அதிக இடங்கள் ஏன்? – அமைச்சர்

3

திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் அதற்கான விளக்கத்தை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள், மதிமுகவிற்கு 4 தொகுதிகள் என ஒதுக்கப்பட்ட நிலையில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

நீண்ட ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் கூட்டணியில் இணைந்த தேமுதிகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைத்தனர்.

 

இந்நிலையில் சென்னையில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒவ்வொரு கூட்டணி கட்சிகளுக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட்டு 2 அல்ல 3 முறை பேசிய பின்பும் உரிய மரியாதை கொடுக்கப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்தது தவறு என்பது கூறுவது தவறு. தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்த கட்சி. அதனால் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திரமாக கூட்டணி கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.தமிழகம் முழுவதும் திமுக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் அறிக்கை தயாரித்து அதை முதலமைச்சருக்கு வழங்கி அதன் பின்னர் வெளியிடுவோம். அனைவரின் கருத்துகளை கேட்டு அதன் பின்னர் வெளியிடுவோம்.

 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது. எல்லோருக்கும் பாதுகாப்பு அளிக்கின்ற வகையில் தமிழகம் இருக்கிறது.மற்றவர்களை விமர்சனம் செய்வதே எடப்பாடியின் வேலை. முதலில் அவர் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும், பின்னர் மற்றவர்களை பேச வேண்டும்.

 

என்டிஏ கூட்டணிக்கு தோல்வி தான் என தெரியும். அதனால் பயத்தால் பேசி வருகிறார்கள். எதிர்காலத்தில் நிதிஷ்குமாருக்கு வந்த நிலை, சிவசேனா கட்சிக்கு வந்த நிலை அதிமுகவுக்கு வரப்போகிறது என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறார் என்றும் தெரிவித்தார்.

Right Menu Icon