கூட்டணி தொகுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!
தமிழ்நாடு 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா என மொத்தம் 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜகவுக்கு 27 தொகுதிகள், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், தமாகவுக்கு 5 தொகுதிகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 23 வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்டது.ந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்தத் தொகுதிகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, பாஜகவுக்கு மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவிநாசி (தனி), திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி), மதுரை தெற்கு ஆகிய 27 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.பாமகவுக்கு சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் (தனி), கீழ் வேலூர் (தனி), பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.
அமமுகவுக்கு, பெரியக்குளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளம் ஆகிய 11 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.
தமாகவுக்கு ராணிப்பேட்டை, ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம் ஐந்து தொகுதிகளும், ஐஜேகேவுக்கு பல்லாவரம், குன்னம் ஆகிய இரு தொகுதிகளும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ராஜபாளையம், புரட்சி பாரதம் கே.வி. குப்பம் (தனி) ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்படுகின்றன” இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் போது நயினார் நாகேந்திரன், அன்புமணி, டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






