தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு கட்டுப்பாடு – தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் தேர்தல் முடியும் வரை மது விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒருவருக்கு 4.5 லிட்டர் மது; 7.8 லிட்டர் பீர், 9 லிட்டர் ஒயின் மட்டும் அனுமதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேலும், ஒரே ரசீதில் 6 ஃபுல் பாட்டில், 12 ஆஃப், 24 குவார்ட்டர், 12 பீர் பாட்டில் மட்டுமே வாங்கலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.





