--- --:--:-- --

வி.கே. பாண்டியன் தலைமையில் அறக்கட்டளை..!

7

பிஜு நவீன் இன்ஸ்பிரேஷனல் ஃபவுண்டேஷன்’ கடந்த 2025 மே மாதம் பி.ஜே.டி தலைவரும் ஒடிசா முன்னாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக்கால் நிறுவப்பட்டது. இது குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கட்சித் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

 

பி.ஜே.டி தலைவர் நவீன் பட்நாயக் சுமார் ஓராண்டுக்கு முன்பு தொடங்கிய ‘பிஜு நவீன் இன்ஸ்பிரேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற அறக் கட்டளையின் நோக்கம் மற்றும் நிதி குறித்து ஒடிசாவில் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த அறக்கட்டளையின் தலைவராகவும் ஆயுட்கால அறங்காவலராகவும் இருப்பவர் வி.கே. பாண்டியன். 2024 சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.டி-யின் தோல்விக்கு பாண்டியனே காரணம் என்று கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் பொதுப் பொறுப்புகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.

 

 

புதன்கிழமை, பி.ஜே.டி கட்சிக்குள்ளிருந்தும் எழுந்த கேள்விகளை எதிர்கொண்ட பட்நாயக், சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இடையே செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த அறக்கட்டளை பி.ஜே.டி அல்லது வேறு எந்தக் கட்சியிடமிருந்தும் நிதி பெறவில்லை என்று கூறினார். மும்பையில் ஒரு முக்கியமான கழுத்து அறுவை சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்னதாக, சட்ட மற்றும் நிதி நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் பிஜு நவீன் இன்ஸ்பிரேஷனல் ஃபவுண்டேஷனை நிறுவியதாக முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார். அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, இந்த அறக்கட்டளை கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியில் ‘இந்திய அறக்கட்டளைச் சட்டம், 1982’-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியின் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சாலையில் உள்ள பட்நாயக்கின் இல்லமே அதன் முகவரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

“ஒடிசா மக்களின் நலனுக்காக பிஜு பாபு (நவீனின் தந்தை மற்றும் முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்) பெயரில் ஒரு அறக்கட்டளையைத் தொடங்க முடிவு செய்தேன். இது எனது சொந்த நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாயுடன் தொடங்கப்பட்டது… பி.ஜே.டி அல்லது எந்தக் கட்சி நிதியிலிருந்தும் பணம் வராது,” என்று பட்நாயக் கூறினார்.

 

அறிவியலைப் பிரபலப்படுத்துவதற்காக பிஜு பட்நாயக் தனது 30 வயதிலேயே ‘யுனெஸ்கோ கலிங்கா விருதை’ உருவாக்கியதை நினைவு கூர்ந்த நவீன், தனது தந்தை மற்றும் குடும்பத்தின் “அறப்பணி பாரம்பரியத்தை” சுட்டிக்காட்டினார். இது அவரது வாழ்நாளில் செய்த பல நற்பணிகளில் ஒன்று என்று பட்நாயக் கூறினார்.

 

“நானும் எனது சகோதரர் மற்றும் சகோதரியும் கட்டாக்கில் உள்ள எங்களது குடும்ப வீடான ஆனந்த் பவனை ஒடிசா மக்களின் பயன்பாட்டிற்காக தானமாக வழங்கினோம்.”நிதி மற்றும் நோக்கம் தவிர, பட்நாயக் அரசாங்கத்தின் போது சர்ச்சைக்குரிய செல்வாக்குடன் இருந்த அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாண்டியனை அறக்கட்டளையை வழிநடத்தத் தேர்ந்தெடுத்தது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

 

அறக்கட்டளையின் செயலாளராக முன்னாள் கார்ப்பரேட் தலைவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சந்த்ருப்த் மிஸ்ரா உள்ளார். இவர் பட்நாயக்கின் அரசியல் செயலாளராகவும், சமீபத்தில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராகவும் உள்ளார். ஒடிசாவின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் அசோக் குமார் பரிஜாவும் ஒரு அறங்காவலராக உள்ளார். பாண்டியனைப் போலவே இவர்களும் ஆயுட்கால அறங்காவலர்கள்.

 

அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, பிஜு நவீன் இன்ஸ்பிரேஷனல் ஃபவுண்டேஷன் கல்வி மற்றும் எழுத்தறிவு, சுற்றுச்சூழல், வனம், ஆரோக்கியம், ஊரக வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் செயல்படுகிறது. ஒரு பி.ஜே.டி தலைவர் கூறுகையில்: “அறக்கட்டளை குறித்து எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் அது வெளிப்படையான முறையில் செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த ஆண்டு மே மாதம் இது பதிவு செய்யப்பட்டிருந்தால், சில மூத்த கட்சித் தலைவர்களுக்காவது தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.”

 

இந்த அறக்கட்டளை ஏன் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது என்றும் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். “பிஜு பாபு மற்றும் நவீன் பாபுவின் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டால், அது ஒடிசா மக்களுக்காகச் செயல்பட வேண்டுமே தவிர, டெல்லியில் அல்ல,” என்று அந்தத் தலைவர் கூறினார்.

 

பி.ஜே.டி எம்.பி மிஸ்ரா தனது மாநிலங்களவைத் தேர்தலுக்காகத் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இந்த அறக்கட்டளை குறித்து ஏன் குறிப்பிடவில்லை என்று பா.ஜ.க கேள்வி எழுப்பியுள்ளது, இது திட்டமிட்டே செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளது. இது தொடர்பான கேள்விகளுக்கு மிஸ்ரா பதிலளிக்கவில்லை.

Right Menu Icon