--- --:--:-- --

8 நாட்களில் 3 நாட்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது – அர்ச்சனா பட்நாயக்

2

மிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத்தாக்கல் செய்ய 8 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அதில், 5 நாட்கள் மட்டுமே மனுத் தாக்கல் செய்ய முடியும் என்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

இதில் போட்டியிட விரும்புபவர்கள், வரும் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தேர்தல் ஆணையம் அறிவித்த 8 நாட்களில் 3 நாட்கள் பொது விடுமுறை வருவதால், 5 நாட்கள் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஒரே நாளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார்.காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொள்ளலாம் என்றும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

Right Menu Icon