--- --:--:-- --

கட்சி பெயரை அறிவித்த வி.கே.சசிகலா..!

1

னைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியின் பெயரை வி.கே. சசிகலா அறிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்கில் புதிய கட்சி தொடங்குவதாக அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, எம்ஜிஆர் மக்களுக்காக ஒரு கட்சி ஏற்படுத்தினார். அதற்குக் காரணம் திமுக என்ற தீய சக்தியை வீழ்த்துவதுதான். அதிமுக ஏழைகளுக்காக உருவாக்கப்பட்டது. தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தார்.

 

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. தமிழக மக்களை திமுக என்ற தீய சக்தி கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று நான் கட்சிக்கொடி அறிமுகம் செய்தேன். எம்ஜிஆரை போல் எனக்கும் அந்த சூழல் வந்துள்ளது” என்றார்.

 

அதன்படி “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்” என்ற தொண்டர் ஆரம்பித்த கட்சியில் தன்னை இணைத்துக்கொள்வதாக சசிகலா தெரிவித்தார். அக்கட்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Right Menu Icon