--- --:--:-- --

தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை – பெ.சண்முகம் பேட்டி

5

தி.மு.க-வுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தி.மு.க-வில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக் குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழு இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

அவர்கள் ஒதுக்கீடு செய்ய உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை சொல்லியிருக்கிறார்கள். அதில் எங்களுக்கு ஏற்பு இல்லை. கூடுதலான தொகுதிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் வற்புறுத்தி இருக்கிறோம். அவர்கள் தலைமையோடு பேசிவிட்டு மீண்டும் பேசலாம் என்ற முறையில் பேச்சுவார்த்தை குழு தெரிவித்து இருக்கிறது.

 

ஆகவே மீண்டும் நாளை பேச்சுவார்த்தை தொடரும். நிறைய புதிய கட்சிகள் இந்த அணியில் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்கிற ஒரு நியாயமான காரணத்தை தி.மு.க தரப்பிலிருந்து சொல்லியிருக்கிறார்கள். அது ஏற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது.

 

அதனால், நாங்கள் எதிர்பார்த்த கூடுதலான தொகுதிகளுக்கு வாய்ப்பில்லை என்ற நிலையில் கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற முறையில் நாங்கள் வற்புறுத்தி இருக்கிறோம். அவர்கள் அவர்களுடைய தலைவரோடு பேசிவிட்டு மீண்டும் நாளை சந்திக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். நாளை தொடர்ந்து பேசுவோம்” என்று கூறினார்.

Right Menu Icon