அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, முதலமைச்சரின் போலி கண்ணீர் அ.தி.மு.க-விற்காக இருக்கிறது.
5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் செய்த சாதனைகளை சொல்லாமல் அ.தி.மு.க-விற்காக நீலி கண்ணீர் வடிக்கிறார். தமிழ்நாட்டில் மக்கள் திமுக-வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்றார்.






