--- --:--:-- --

கச்சா எண்ணெய் கப்பல்களை மீட்க சீனா பேச்சுவார்த்தை..!

7

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க சீனா தற்போது ஈரானுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பான வழித்தடத்தை உறுதி செய்ய சீனா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் முடங்கியுள்ளதால், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் எண்ணெய் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு (1/5) எண்ணெய் மற்றும் எரிவாயு இந்தப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon