ஈரானில் இருந்து இந்தோனேசியர்கள் வெளியேற்றம்..!
ஈரானில் நிலவும் அசாதாரணமான சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் தனது நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணியை இந்தோனேசியா தொடங்கியுள்ளதாக அல் ஜசீரா (Al Jazeera) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஹெனி ஹமிதா (Heni Hamidah) இது குறித்துக் கூறுகையில், முதற்கட்டமாக இந்த வெளியேற்ற நடவடிக்கைகள் அஜர்பைஜான் (Azerbaijan) வழியாக மேற்கொள்ளப்படும். முதல் குழுவில் 32 இந்தோனேசிய குடிமக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இவர்கள் வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை ஜகார்த்தாவை (Jakarta) வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் இதர நகரங்களில் மொத்தம் 329 இந்தோனேசிய குடிமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈரானின் கோம் (Qom) நகரில் செறிவாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




