விஷால்-தன்சிகாவின் திருமணம் எப்போது நடக்கப்போகிறது..?
தமிழ் சினிமாவின் புரட்சி தளபதியாக வலம் வருபவர் தான் நடிகர் விஷால்.நடிகர் என்பதை தாண்டி நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்று நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்.
கடைசியாக விஷால் நடிப்பில் நீண்ட வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட மதகஜராஜா திரைப்படம் வெளியாக படம் பட்டய கிளப்பியது, வசூலில் மாஸ் காட்டி இருந்தது. அப்படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் மகுடம், புருஷன், துப்பறிவாளன் 2 என 3 படங்கள் தயாராகி வருகிறது.
இதில் மகுடம் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் விஷால்.பட விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் விஷாலிடம் ரசிகர்கள் முதலில் கேட்க நினைப்பது திருமணம் எப்போது என்பது தான். இவர் நடிகை தன்சிகாவை காதலித்து நிச்சயதார்த்தமும் செய்துகொண்டார்.
ஆனால் இவர்களின் திருமணம் இன்னும் நடக்கவில்லை, நடிகர் சங்க கட்டடம் திறந்தால் தான் தனது திருமணம் என உறுதியாக உள்ளார் விஷால்.இந்த நிலையில் மார்ச் மாதத்தில் நடிகர் சங்க கட்டட திறப்பு விழா நடத்த வாய்ப்பு அதிகம் என கூறப்படும் நிலையில் ஏப்ரல் மாதத்தில் விஷால்-சாய் தன்ஷிகா திருமணம் நடைபெறும் என செய்திகள் வலம் வருகின்றன.





