தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?
2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளதால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்கமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் நேற்று ( பிப்ரவரி 23) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860க்கும் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,890க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,730க்கும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,01,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




