--- --:--:-- --

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!

1

2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாத நடுவில் இருந்து தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.

 

கடந்த 2 – 3 நாட்களாகவே தங்கம் விலை இறங்கு முகத்தில் இருந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து, நேற்று தங்கம் விலை ஒரே நாளில் இறங்கிய வேகத்தில் அதிரடியாக உயர்ந்தது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.270 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும் சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,16,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,420க்கும் சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,350க்கும் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.98,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Right Menu Icon