--- --:--:-- --

​திருவாடனையில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம்: கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

10

திருவாடானை: மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான போக்கைக் கண்டித்து, திருவாடானையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

 

​ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பாக இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய பொது வேலைநிறுத்த அறைகூவலின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) மற்றும் பல்வேறு தொழிலாளர் சங்கங்கள் பங்கேற்றன.

 

இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி சங்க தலைவர் முத்துராமர் தலைமை வகித்தார். தொழிலாளர் சட்டங்கள்: 44 தொழிலாளர் நலச் சட்டங்களைச் சுருக்கி, நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலை) பெயர் மாற்றம் மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான மத்திய அரசின் போக்கிற்கு கண்டனம்.

விவசாயிகள் நலன்: விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். ​மறியலில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, திருவாடானை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அங்குள்ள தனியார் மஹால் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

Right Menu Icon