விஜய் சரியான சந்தர்ப்பத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார்: ராஜ்மோகன்
திமுகவின் வெற்றியில் காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கு உள்ளது. ஆனால், அவர்களின் வாக்குகளை மட்டும் பெற்றுக்கொண்டு அதிகாரத்தில் பங்கு தர மறுப்பது ஒரு மோசடி.
சரியான நேரத்தில், சரியான கூட்டணி குறித்துத் தவெக தலைவர் விஜய் அறிவிப்பார். தவெக வந்த பிறகுதான் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே ஒரு ‘டிமாண்ட்’ (Demand) ஏற்பட்டுள்ளது. வெறும் இடங்கள் (Seats) அல்லது சலுகைகளைக் கேட்பது எங்கள் நோக்கமல்ல.
அதிகாரப் பகிர்வைத் தருவோம் என்பதுதான் எங்கள் கட்சியின் அடிப்படை கொள்கை. விஜய் சரியான சந்தர்ப்பத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு ராஜ்மோகன் பேட்டி





