பிப். முதல் வாரத்தில் தி.மு.க தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை..!
பிப்ரவரி 3 ஆம் தேதிக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தொடங்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி முதல் வாரத்தில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் அறிவிக்கவுள்ளார்.






