--- --:--:-- --

எதிர்பார்த்ததைவிட வைத்திலிங்கத்தின் பணி சிறப்பாக இருக்கிறது – மு.க.ஸ்டாலின்

1

ரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் சந்தேகமும் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் மாற்றுக் கட்சியில் இருந்து 10 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. சமீபத்தில் திமுகவில் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

 

அப்போது இது இணைப்பு விழாவா மாநாடா என கேள்வி எழுவதாக கூறினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நம்முடைய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து, தாய்க் கழகமாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, அதற்கு பிறகு, ஒரு வார காலத்திற்குள்ளாக இந்தச் சிறப்பான இணைப்பு விழா நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், உள்ளபடியே நான் எதிர்பார்த்தது.

 

நான் எதிர்பார்த்ததைவிட அதிகமான அளவிற்கு இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல; திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வந்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என்றார்.

“மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் சுறுசுறுப்பாக பணியாற்றியதை நான் பார்த்தது உண்டு. ஆனால், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அ.தி.மு.க. கட்சி உடைந்து, அது சின்னாபின்னமாகி இருந்த நிலையில், அப்போது அவர் சட்டமன்றத்தில் வந்து அமர்ந்திருக்கும் காட்சிகளை நான் பார்ப்பேன். அவருடைய முகத்தில் ஒரு சோர்வு இருந்து கொண்டே இருக்கும். எதையோ பறி கொடுத்ததுபோன்று உட்கார்ந்திருப்பார். ஏதோ வேண்டா வெறுப்போடு சில கேள்விகளைக் கேட்பார்.

 

ஏதோ வேண்டா வெறுப்போடு அமர்ந்திருக்கும் காட்சிகளை நான் பல நேரங்களில் சட்டமன்றத்தில் பார்த்ததுண்டு. அது என்ன என்பதை இப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன். சுயமரியாதையோடு நாம் இருக்க முடியவில்லையே; சுயமரியாதையோடு நாம் பணியாற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தில் இருந்திருக்கிறது. என்ன, அவர் சற்று லேட்டாக வந்து சேர்ந்திருக்கிறார். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக பணியாற்றப் போகிறார். இதுதான் நமக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.” என்றார்.

மேலும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் அதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் திமுகவினர் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

Right Menu Icon