அமைச்சர் சேகர்பாபு- ஓ.பி.எஸ் திடீர் சந்திப்பு
சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவுற்ற பின் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் சேகர் பாபு சந்தித்துள்ளனர். சபாநாயகர் அப்பாவு அறையில் இருவரும் 15 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
ஓ.பி.எஸ் அணி மாநிலங்கள் அவை உறுப்பினர் தர்மர் இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். ஓ.பி.எஸ் அணியில் இருந்து விலகி அவர் அ.தி.மு.க-வுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





