--- --:--:-- --

தமிழ்நாடு முழுவதும் களைகட்டும் தைப்பொங்கல்..!

10

மிழ்நாடு முழுவதும் தைப் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு மங்கலமாகத் தைப் பொங்கலை வரவேற்கின்றனர்.

 

பொங்கல் திருநாள் முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. இப்போட்டியில் சுமார் 1,000 காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். அதிக காளைகளைப் பிடிக்கும் சிறந்த வீரருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்படும்.

Right Menu Icon