--- --:--:-- --

திருவாடானை அரசு பெண்கள் பள்ளியில் குழந்தை திருமண தடுப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

10

​திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. திருவாடானை பாரதி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, திருவாடானை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆண்டனி ரிஷாந்த் தேவ் தலைமை தாங்கினார்.

 

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் நூற்றுக்கணக்கான மாணவிகள் இதில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி, பெண் கல்வியின் அவசியம் குறித்தும், குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

 

​​இந்த முகாமில் மூத்த வழக்கறிஞர் சிவராமன், பள்ளித் தலைமை ஆசிரியை மகேஸ்வரி, வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவிகளின் சந்தேகங்களுக்கு நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை சட்ட தன்னார்வலர் கோட்டைச்சாமி செய்திருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon