--- --:--:-- --

பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்னலாம் உள்ளது..?

2

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகை கொண்டாட்டத்தை இன்னும் கூடுதல் சிறப்பாக்க அரசின் சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களுடன் சில ஆண்டுகளில் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டு வந்தது.

பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரொக்கம் வழங்கப்படுமா?, எவ்வளவு வழங்கப்படும் மற்றும் எப்போது இவை வழங்கப்படும் என்பது தான் தற்போது மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுடன் ரூ.2500 ரொக்கமாக வழங்கப்பட்டது.

 

அதுவே இதுவரை கொடுக்கப்பட்ட அதிகபட்ச ரொக்கம் ஆகும். இதைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது. அந்தவகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு எவ்வளவு வழங்கப்படும் என்பது குறித்து பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 கரும்பு ஆகியவற்றை அடங்கிய தொகுப்பிற்கான நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இதுவரை வழங்கப்படாத ரொக்கத்தை வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ரூ.5000 வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Right Menu Icon