தமிழ்நாட்டில் போக்குவரத்து அபராதங்களில் 71% வசூலிக்கப்படவில்லை
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தில் 71 சதவீதம் வசூலிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாவதர்களுக்கு விதிக்கப்படும்.
அபராத தொகையை பெரும்பாலானோர் செலுத்தாமல் இருப்பது தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிவிப்பில், அதிக வேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாதது உள்ளிட்டவற்றுக்காக 2024ஆம் ஆண்டு மட்டும் ஒருகோடியே 11 லட்சம் E CHALLAN வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு அபராதம் விதிக்கப்பட்டதில் 43 சதவீதம் மற்றும் 2023ஆம் ஆண்டு 30 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பபட்டுள்ளது.






