மகளிர் உரிமைத் தொகை பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டம் – அன்பில் மகேஸ்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படவில்லை என்றும், இது பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் முன்னேற்றத்திற்கான திட்டம் என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கை தேர்தலைக் குறிவைத்தே அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் விமர்சனத்திற்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘தமிழ்நாடு தலைகுனியாது, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பரப்புரை கூட்டத்தின் தொடர்ச்சியாக, திருச்சி தெற்கு மாவட்ட திமுக-வுக்கு உட்பட்ட திருவெறும்பூர் மற்றும் கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாநகரம், நகரம், ஒன்றியப் பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்தப் பரப்புரையைத் தொடங்கி வைத்தார்.





