--- --:--:-- --

புதியவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வரவுவைக்கும் பணி தொடக்கம்

2

லைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆவது கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க நிலையில் புதியவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 

பெண்களுக்கான தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்களின் சாதனைகள் மற்றும் பயனடைந்த மகளிரின் அனுபவங்களை எடுத்துரைக்கும் வகையிலும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாகவும் இது நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் 2ஆம் கட்ட விரிவாக்கப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில் புதியவர்களுக்கு ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணி தொடங்கி உள்ளது. புதிதாக விண்ணப்பித்தவர்கள் பல பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக கைப்பேசிக்கு மெசேஜ் வந்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை விண்ணிப்பத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டு கொண்டு இருக்கிறது. சுமார் 18 லட்சம் பெண்களுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon