மீண்டும் ரூ.1 லட்சத்தை எட்டும் தங்கம் விலை..!
சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கமும், வெள்ளியும் போட்டி போட்டு கொண்டு உயர்ந்து புதிய வரலாறு காணாத விலையை தொட்டு வருகிறது.டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் மட்டுமே அதிரடியாக உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,050க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,250க்கும் சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,230க்கும் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டுமே கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215க்கும் கிலோவுக்கு ரூ.6,000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.2,15,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





