இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி
இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இண்டிகோ விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் காத்திருப்பதால், பயணிகளின் பாதுகாப்பிற்காக விமான நிலையப் புறப்பாடு பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.





