--- --:--:-- --

புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்றுவதற்கான காரணத்தை விளக்க தயாரா?

7

துரை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலையின் உச்சியில் கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக அண்மையில் சர்ச்சை ஏற்பட்டது. பாரம்பரியமாக, கார்த்திகை தீபம் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் ஏற்றப்பட்டு வந்தது.

 

இந்த நிலையில், தீபத்தூணில் (மலை உச்சியில் உள்ள ஒரு தூண்) தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், மனுதாரர் ராம ரவிக்குமார் 10 பேருடன் சி.ஐ.எஸ்.எஃப் (CISF) வீரர்களின் பாதுகாப்போடு மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டார்.

 

அத்துடன், மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த 144 தடை உத்தரவையும் அவர் ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தது. அரசின் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அரசின் மனு உள்நோக்கத்துடன் தொடரப்பட்டதாக நீதிபதி கருத்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

 

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தீபம் ஏற்ற முயன்ற இந்து அமைப்பினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், சில காவலர்கள் காயமடைந்ததாகவும், மலைக்குச் செல்லும் வாயில்கள் சேதமடைந்ததாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட 12 முதல் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

Right Menu Icon