--- --:--:-- --

ஜெயலலிதா மறைவு: இன்று 9வது நினைவு தினம்

3

எம்ஜிஆருக்கு பிறகு எழுந்த தலைமைப் போட்டியில் பலரையும் பின்னுக்குத் தள்ளி அதிமுகவின் முகமாக உருவெடுத்த ஜெயலலிதா, தொண்டர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு வீற்றிருந்ததுடன், தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியை நீண்ட காலம் வகித்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.

 

2016 ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். ஜெயலலிதாவின் மறைவால், அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

ஜெயலலிதா மரணமடைந்ததும் அவருடைய தோழி சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதலமைச்சராக அமரவைக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கும், சசிகலாவிற்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட, எடப்பாடி பழனிசாமியை அடுத்த முதல்வராக தேர்வு செய்தார்.

 

பின்னர், எடப்பாடி பழனிசாமியுடன், ராசியாக மீண்டும் கட்சிக்கு ஓபிஎஸ் திரும்பினார். 2017 ஆகஸ்ட்டில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் என்பது நீண்டகால புகைச்சலாக இருந்து வந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தரப்பு இடையே பனிப்போரும் தொடங்கியது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

Right Menu Icon