இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், வருகிற 10ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மீனவர்களுக்கு வருகிற 8ஆம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக சென்னை மணலி புதுநகரில் 24 சென்டி மீட்டர், திருவள்ளூர் எண்ணூரில் 21 சென்டிமீட்டர் மழை பதிவானது.





